நீர்தேக்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

suicide man Kill Death Dead Body
suicide man Kill Death Dead Body

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

நோர்வூட் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நோர்வூட் ஆற்றுப்பகுதியிலேயே பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலம் பழுதடைந்துள்ளமையினால் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.