அரசியல் போட்டிக்கு பலியாகும் கள் இறக்கும் தொழிலாளிகள்!

kal
kal

கிளிநொச்சியில் கடந்த 12.01.2021 தொடக்கம் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைமைக்காரியாலயத்தில் இரு தொழிலாளிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

உணவுத் தவிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளிகளால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளாவன
01.கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அவர்களினால் 04.01.2021 ஆந் திகதி நியமனம் வழங்கிய நிர்வாக உறுப்பினர்களின் நியமனம் இரத்து செய்தல்

02.சங்கத்தின் அங்கத்தவர்கள்,பணியாளர்கள் , அவர்களது வாழ்வாதாரங்கள் நலன் கருதி சங்கத்தின் அபிவிருத்திக்கு தற்போதுள்ள இயக்குனர் சபையினை மீளவும் இயங்க வைத்தல்

03 .சங்கத்தின் கிளைக்குழுத் தேர்தல் நடாத்தி பொதுச்சபையின் ஊடாக புதிய இயக்குனர் சபை ஒன்றினை தெரிவு செய்தல் என்பனவாகும் .

ஆயினும் மேலோட்டமாக பார்த்தால் இது பொதுவான தொழிற்சங்க நடைமுறைப் பிரச்சினைகளாக தோன்றினாலும் இவ் விடயத்தில் அரசியல் பலப் பரீட்சையே நடைபெறுகின்றது குறிப்பிட்ட சங்கத்தில் நிர்வாகக் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களும் சந்திரகுமாரின் ஆட்களுமே மாறி மாறி நிறைவேற்றுக்குழுவில் அங்கம் வகித்து வருகின்றனர்

அண்மையில் சந்திரகுமார் அணியிலிருந்து டக்ளஸ் அணிக்கு தாவியவரையும் அவர் சார்ந்தோரையும் சங்கத்தின் நியமன உறுப்பினர்களாக அரசியல் பின்புலத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான கூட்டுறவு உதவி ஆணையாளர் நியமன உறுப்பினர்களாக நியமித்து இருந்தமையே தற்போதைய சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பிட்ட இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தினால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கள் நிலையங்களும் மூடப்பட்டு அப்பாவித் தொழிலாளிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

பணம் கொழிக்கும் இந்த சங்கத்தின் பதவிக்கு சில குறிப்பிட்டவர்களே மாறி மாறி வருவதும் அந்த பதவியை காப்பாற்றுவதற்காக அந்த காலப்பகுதியில் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் கை கோர்த்து பதவியை தக்க வைப்பதும் பல காலமாக நடந்து வருவதாக அப்பாவித் தொழிலாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்

அப்பாவிகளின் வயிற்றிலடித்து தங்கள் சுக போகத்தை தக்க வைக்க முயலும் தொழிற்சங்க நிர்வாகிகளும் அதற்கு துணை போகும் அரசியல்வாதிகளும் திருந்தாதவரை தொடர்ச்சியாக அப்பாவித்தொழிலாளிகள் பாதிக்கப்படும் நிலை காணப்படும் இந்த நிலைமை தொடராமல் இருக்க என்ன செய்வதென்று தெரியாமல் ஏங்கித் தவிக்கின்றனர் அப்பாவித் தொழிலாளிகள்.

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளியின் கள நிலவரம் பின்வருமாறு