மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரிப்பு!

202008280649151935 Corona infection can affect all organs medical experts SECVPF 1
202008280649151935 Corona infection can affect all organs medical experts SECVPF 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் எறாவூர் காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் 10 காவற்துறையினர் உட்பட  15 பேருக்கு பி சிஆர் அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 440 ஆக அதிகரித்துள்ளதுடன் 5 உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக இன்று  சனிக்கிழமை (16) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். 


மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த நிலையில்  மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுகளில்  ஒருவருக்கும்  காத்தான்குடி சுகாதார பிரிவில் 4 பேருக்கம், ஏறாவூர் காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் 10 பேர் உட்பட 15 பேருக்கு புதிதாக தொற்றுறுதி கண்டறியப்பட்டுள்ளது 


இதில் 215 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன் 222 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்