வர்த்தக ஏற்றுமதி ஊடாக 10.15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலக்கு – ஈடிவி

image 63529309fb 1
image 63529309fb 1

நாட்டின் முக்கிய அந்நிய செலாவணியின் ஆதாரமான ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை ஈடிவி(EDB ), இந்தாண்டு ஏற்றுமதி வருமானத்தில் 10.15 பில்லியன் அமெரிக்க டொலர்களை பொருட்கள் ஏற்றுமதியினுடாகவும் சேவைத்துறை ஏற்றுமதி மூலம் 4.58 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதனை இலக்காகக் கொண்டுள்ளது.

முக்கிய சந்தைகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதிகள் மூலம் ஏற்றுமதி வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட செயல் திட்டம் 2021’ தற்போதைய உலகளாவிய நிலைமையைக் கருத்திற்க் கொண்டுஈடிவி (EDB )வகுத்த புதிய திருத்தப்பட்ட மூலோபாயத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட புதிய ஏற்றுமதி வழிகளை ஆராய்வதோடு, இந்த ஆண்டு ஏற்றுமதியைத் தக்கவைத்துக்கொள்வதை மையமாகக் கொண்டு செயற்த் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது ஈடிவி( EDB )ஆலோசனைக் குழுக்கள் மற்றும் துறை சங்கங்களுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஈடிவி( EDB )தலைவர் சுரேஷ் டி மெல் தெரிவித்தார். .

ஈடிவி(EDB )முன்முயற்சிகள் முக்கியமாக அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பின் மூன்று முக்கிய கொள்கைகளுடன் இணைகின்றன – நட்பு மற்றும் சீரமைக்காத வெளியுறவுக் கொள்கை, தொழில்நுட்ப அடிப்படையிலான சமூகம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் வளர்ச்சி மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. இந்த திசையில் பல சீரமைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஈடிவி( EDB) மேற்கொள்கிறது, ”என்று டி மெல் மேலும் தெரிவித்தார் .