மார்ச்மாதம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் என அரசாங்கம் தெரிவிப்பது பொய்- ரணில்

ranil wickremesinghe 2 300x150 1
ranil wickremesinghe 2 300x150 1

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை கொள்வனவு செய்வதற்கான உரிய தந்திரோபாயம் எதுவும் இலங்கை அரசாங்கத்திடமில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


நுகேகொடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மார்ச்மாதம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரிடம் பத்துமில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளமை குறித்த தகவல் எனக்கு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுதிட்டம் மூலம் எங்களால் இந்த பணத்தை பெற்றிருக்க முடியும் ஆனால் அதற்கு மாறாக தனியார் துறையிடம் நாங்கள் பிச்சை எடுக்கின்றோம் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.