இரண்டு வாரங்களிற்குள் மேல்மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சி- ஜி.எல்.பீரிஸ்

school tuition 2 1 300x150 1
school tuition 2 1 300x150 1

மேல்மாகாணத்தில் பல பகுதிகளில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளிற்காக மீண்டும் ஆரம்பிக்க முடியும் என கல்வியமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.


பல பகுதிகளில் கொரோனா பரவல் ஆபத்தில்லை என்பதால் பாடசாலைகளை மூடிவைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களிற்குள் மேல்மாகாணத்தில் பாடசாலை அனைத்து தரங்களையும் சேர்ந்த மாணவர்களிற்கும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சுகாதார அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி செயலணியை சேர்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களின் பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.