கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய விதையனைத்தும் விருட்சமே குழுவினர்!

received 758816924991263
received 758816924991263

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை , பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 103 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று(17) வழங்கி வைக்கப்பட்டது.

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டமானது வடக்கு கிழக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் வருடம் தோறும் அதிஸ்ரலாப சீட்டிழுப்புக்களை நடத்தி அதில் வரும் பணத்தில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில் 2020 ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அதிஸ்ரலாப சீட்டிழுப்பின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு இம்முறையும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 மாணவர்களை இலக்காக கொண்டு ஒரு மாணவருக்கு தலா 2000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கும் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் 96 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வோடு இவ்வாண்டுக்கான செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து இன்று (17) கிளிநொச்சி மாவட்டத்தில் 103 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 22 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17) காலை 9 மணிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செ.சுஜிதரன் அவர்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.

இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் செல்வி கே.குணஜா பச்சிலைப்பள்ளி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செ.சுஜிதரன் பச்சிலைப்பள்ளி பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன தலைவர், பொருளாளர் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 30 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17) மாலை 2.30 மணிக்கு தர்மபுரம் மத்திய கல்லூரி மண்டபத்தில் கண்டாவளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி லா.நிகஷன் அவர்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.

இதில் கண்டாவளை பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பு.வினோதராஜ், தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளர் திருமதி கு.குணாளினி, தர்மபுரம் மத்திய கல்லூரி ஆசிரியர் திருமதி மா.ரசீகரன், கண்டாவளை பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன தலைவர், பொருளாளர் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17) மாலை 4.30 மணிக்கு கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கரைச்சி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஜெ.சுகந்தன் அவர்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது

இதில் கரைச்சி பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.கஜிதன், கரைச்சி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் றெஜி அலோசியஸ் அரச அதிகாரிகள் கரைச்சி பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன தலைவர், பொருளாளர் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.