ஸ்ரீலங்காவில் இந்தியா – பாகிஸ்தானுக்கிடையில் கடும் வாக்குவாதம்!

625.500.560.450.380.600.708.800.900.160.90
625.500.560.450.380.600.708.800.900.160.90

கொழும்பு ஹில்டன் விடுதியில், சிறுவர்களுக்கான தெற்காசியா நாடாளுமன்ற தளத்தின், அமர்வு நேற்று இடம்பெற்றபோது இந்திய – பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு இடையில் நடந்த காரசாரமான வாக்குவாதங்களை அடுத்து, இந் நாடாளுமன்ற அமர்வை சுருக்கமாக முடிக்கும் நிலை ஏற்பட்டது.

இதில், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்திய – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு நிலையை இந்தியா ஏன் ரத்து செய்தது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், பாகிஸ்தானிய நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது.

இதனால் ஏராளமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியதை அடுத்தே, இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பு பிரதிநிதி குழுக்களுக்கிடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றது. இதனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா வலியுறுத்தியது.

இந்த நிலையில், அமர்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஆஷு மாரசிங்க மதிய உணவுக்காக அமர்வை நிறுத்தி, நிலைமையை அமைதிப்படுத்தி சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.