காபந்து அரசாங்கத்தில் செயலாளராக முஸ்லிம் பெண்

smmohammed
smmohammed

காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சின் செயலாளராக முஸ்லீம் பெண் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

திருமதி எஸ்.எம் முஹமட் எனும் பெண்மணி சுற்றுலா மற்றும் விமான அமைச்சகத்தின் புதிய செயலாளர் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

அடிப்படை இஸ்லாமிய மதவாதத்தில் மூழ்காத முஸ்லிம் பெண்மணியாகவும் எஸ்.எம் முஹமட் திகழ்கின்றார்.

இதேவேளை புதிய காபந்து அரசாங்கத்தில் எந்தவொரு முஸ்லீம்களும் உள்ளீர்க்கப்படவில்லை என பரவலாக விமசனங்கள் எழுந்திருந்த நிலையில் மன்னார் மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா மற்றும் விமான அமைச்சகத்தின் புதிய செயலாளராக முஸ்லிம் பெண் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.