மேச்சல் தரை காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

WhatsApp Image 2021 01 20 at 13.03.45
WhatsApp Image 2021 01 20 at 13.03.45

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட மேச்சல் தரைகாணியை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று (20) பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து ஆர்ப்பாட்டமாக பிரதேச செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவில் உள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல்ஏற்றம், காத்தாடியார்சேனை ,பொன்னாங்கண்ணிசேனை, பனையடிவெட்டை, மலையடிவெட்டவிச்சுகுளம் ஆகிய வன பிரதேச கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் கொண்ட பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததையடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் விலகிச் சென்றனர்.