மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய முவரடங்கிய குழு நியமனம்!

Presidential Secretariat Sri Lanka 768x384 1
Presidential Secretariat Sri Lanka 768x384 1

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க இதுவரை நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் கமிஷன்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது குறித்து விசாரிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் முவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம் நவாஸின் தலைமையிலான குறித்த விசாரணைக் குழு இம்மாதம் 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற காவற்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையத்தின் முக்கிய பணி, மனித உரிமை மீறல்கள் முறையாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான இறுதி அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தர வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.