13வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது!!

gr visit to india
gr visit to india

அரசியலமைப்பின் ஒரு பகுதியா 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய விஜயத்தின் பின்னர், இலங்கைக்கு புறப்படுகின்ற வேளையில் ஊடகவியலாளர்களுக்கு இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்;

13வது திருதத்தில் உள்ள பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட சில விடயங்களை வழங்க முடியாது. அதற்கான மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் அதிகாரப்பகிர்வு குறித்து வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள். ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.

பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்

வெள்ளை வாகன கடத்தல், பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறைகள் பற்றி என் மீது சுமத்தப்படுவவை போலியான குற்றச்சாட்டுகள். நிச்சயமாக அப்படி எதுவும் என்னால் செய்யப்படவில்லை. இவை உண்மையென்றால், மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் ஏன் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவில்லை?

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் போரைத் தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போரை முடித்தோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முந்தைய ஜனாதிபதிகளிடம் ஏன் கேட்கப்படவில்லை?

நான் இல்லாமல் மாகாண சபை தேர்தல்கள் இருந்திருக்காது. எங்கள் அரசாங்கம் முதன்முறையாக வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தலை நடத்தியது. தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம்;

நாங்கள் அவற்றைக் கையாள முயற்சிக்கவில்லை, அல்லது எங்கள் விருப்பப்படி ஒரு வேட்பாளரை அழைத்து வரவில்லை. சர்வதேச சமூகம் இந்த விஷயங்களை அங்கீகரிக்கவில்லை, தமிழ் அரசியல்வாதிகள் கூட இந்த விஷயங்களை அங்கீகரிக்கவில்லை, இது வடக்கு மற்றும் கிழக்கில் சிறந்த சூழ்நிலைக்கு வழிவகுத்தது என்றார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சியின் பின்னர் என்னை நீங்கள் அளவிடுங்கள். என தெரிவித்துள்ளார்.