கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது -சுகாதார பிரிவு

pg01 GL
pg01 GL

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எவரும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பைக் கல்வி அமைச்சர் மேற் கொண்டிருந்தமை தெரியவந்த நிலையில் அவர் சுய தனிமைப்படுத்தப்பட்டார்.

அத்தோடு பி.சி.ஆர்.பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.