உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

28a7cee4 1d2b 411d bc22 3c1173fd0981
28a7cee4 1d2b 411d bc22 3c1173fd0981

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பபாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றத அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.