மேல் மாகாணத்தில் 12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை

202005270305300958 Another 1 lakh lakh RTPCR Testing equipment arrived to SECVPF
202005270305300958 Another 1 lakh lakh RTPCR Testing equipment arrived to SECVPF

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மேல் மாகாணத்தைவிட்டு வெளியேறும் நபர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் 12 இடங்களில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்ட பொது இடங்கள், பொதுச் சந்தைகள், மீன் விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களிலும் துரித அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்