மட்டக்களப்பு நகரில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 6 பேருக்கு கொரோனா !

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில்  நகரில் உள்ள பிரபல்ய பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 576 அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


மாவட்டத்தில் தொடர்ந்து எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28) காலை வரையில் மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் மற்று அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவின்படி

 
மட்டக்களப்பு  சுகாதாரப் பிரிவில் பிரபல்ய ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 10 ஆம் ஆண்டு மாணவன் மற்றும் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உட்பட 4 பேரும். காத்தான்குடி சுகாதாரப் பிரிவில் இருவர் உட்பட 6 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது .


இதனையடுத்து குறித்த பாடசாலையில் குறித்த மாணவனுடன்  கல்விகற்கும் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ,நகரிலுள்ள  தங்க நகைக்கடை ஒன்றின் 4 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டு கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது 


இந்த நிலையில் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 715 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  576 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் இவர்களில் 416 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதுடன் 154 பேர் தொடர்ந்து தங்கியிருந்து  சிகிச்சை பெற்றுவருவதுடன் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.