மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன்

1611897995 death 2
1611897995 death 2

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவமொன்று கினிகத்தேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கினிகத்தேன காவல்துறை பிரிவிட்குட்பட்ட செல்லிபிகம பிரதேசத்தில் வசித்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27ம் திகதி மதியம் இருவருக்குமிடையில் ஏற்பட்ட  வாய்த்தர்க்கம் தீவிரமடைந்துள்ளதுடன், கணவர் கூர்மையான ஆயுதத்தினால் மனைவியின் கழுத்தில் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சந்தேக நபர் அவரின் சகோதரர் மூலம் நேற்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.