காணமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

IMG 5669
IMG 5669

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட அவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஊடக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய இவ் ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்கா முன் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்குமாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவை இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது.

IMG 20210129 WA0058

இவ் ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளரகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் , தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG 20210129 WA0072

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், சர்வதேசமே பதில்சொல், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியராளர எங்கே?,படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடு போன்ற கோசங்களை எழுப்பினர்.