கொழும்பில் காய்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு

vegetable
vegetable

கொழும்பில் காய்கறிச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளன.

இதன்படி கொழும்பு ஐந்துலாம்புச் சந்தி காய்கறிச் சந்தையில் வெண்டிக்காய் 250 கிராம் 60 ரூபா, தக்காளி 250 கிராம் 80 ரூபா, பீற்றூட் 250 கிராம் 80 ரூபா, பீர்க்கங்காய் 250 கிராம் 80 ரூபா ஆகிய விலைகளில் நேற்று விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காய்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்தமை குறித்து நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.