பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

big 165616 Coronavirus 1 2
big 165616 Coronavirus 1 2

பிரான்ஸ் கொவிட்-19 பரவல் அதிகரித்தமையை அடுத்து அங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சுகாதார கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த நாட்டு பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் புதிய எல்லை கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் நாடு தழுவிய முடக்கலை அவர் எதிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து அத்தியாவசிய பயணங்கள் தவிர்ந்த சகல பயண நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து வருபவர்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் காவல்துறையினர் தங்களது அதிகார பிரிவுகளில் மாலை நேர முடக்கல்களை அதிகரிப்பார்கள் எனவும் ஜீன் கெஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் நோய் தொற்றின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன