கொரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்த முடியாது – – சுகாதார அதிகாரி

antigen 33 300x169 1
antigen 33 300x169 1

நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் உட்பட கொவிட 19 நோயாளிகள் அனைவரையும் கட்டாயமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கவேண்டும் என தெரிவித்துள்ள பொதுச்சுகாதார சேவையின் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கொரோனா வைரஸ் நோயாளிகள் எவரையும் வீடுகளில் தனிமைப்படுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான போதியளவு இடவசதி மருத்துவமனைகளில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் பெருமளவு நோயாளர்கள் தொடர்ந்தும் அடையாளம் காணப்படுகின்ற நிலையில் கொரோனா வைரஸ் நோயாளி எவருக்கும் வீட்டில் தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கோ சிகிச்சை பெறுவதற்கோ அனுமதி வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அவர்களை உடனடியாக கிசிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என ஹேமந்தஹேரத் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் ஆனால் மருத்துவமனையில் இடவசதி உள்ளது என தெரிவித்துள்ள அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.


வீடுகளில் மக்களை தனிமைப்படுத்துவது மிகவும் கடினமான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நோய்அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு அனுமதித்தால் அவர்கள் நோய் பரவல் அளவில் தாக்கததை அதிகரிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.