மரக்கறி விலையில் வீழ்ச்சி

vegetable
vegetable

கடந்த சில வாரங்களாக வர்த்தக சந்தையில் அதிகரித்து வந்த மரக்கறி வகைகளின் விலை தற்போது நுாற்றுக்கு 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தொிவிக்கின்றன.

பெரும்போக மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கப்பெறுகின்றமையால் அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மையத்திலும் மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

1 கிலோ கிராம் போஞ்சியின் விலை 100 ரூபாய்க்கு வீழ்ச்சியடைந்துள்ளதோடு பாகற்காய், பூசணி, புடோல், கரட், வெள்ளரி, போன்ற மரக்கறிகளின் விலையும் குறைவடைந்துள்ளது.