கடன்களை இரத்து செய்ய நடவடிக்கை!!

shekan semasinghe
shekan semasinghe

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் நுண்நிதி,விவசாயக் கடன் உள்ளிட்ட பல கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்புக்களை கடமையேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது:

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர் தற்போது பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளமையினால் இவர்கள் தமது சொத்துக்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படவுள்ளது. இதற்கென அவர்களுக்கு விஷேட சலுகைகளும் வழங்கப்படும்.

இப்பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான ஆரம்ப கலந்துரையாடல்களை அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் நடத்தியுள்ளோம். வங்கிகளிடமிருந்து இது தொடர்பான அறிக்கைகள் கிடைத்தவுடன் ஒரு வாரகாலத்தில் இந்த சலுகை பெற்றுக் கொடுக்கப்படும்.

முன்னைய அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடலின்மையாகும். நாம் அதிகாரத்துக்கு வந்ததும் மிகத் தெளிவாக எமது கொள்கைகளைத் தெரிவித்துவிட்டோம்.

நாம் பிரதமரின் தலைமையில் மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். இதன் நோக்கம் எதிர்கால முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதே. விசேடமாக இன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகள் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர்.

அவர்களின் அழுத்தத்தை குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் என்ன வென்ற அறிக்கைகளை வங்கிகளிடம் கோரியுள்ளோம். இந்த அறிக்கைகள் கிடைத்தவுடன் தேவையான சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.