விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சுவிஸ் அறிக்கை

swirzerland
swirzerland

கொழும்பிலுள்ள சுவிசர்லாந்து தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பில் இலங்கையின் தூதுவரினால் சுவிசர்லாந்தின் வெளியுறவு அமைச்சிற்கு அலைபேசியினூடாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 25ம் திகதி சுவிசர்லாந்து தூதரக பெண் பணியாளர் மர்ப நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அதிகாரிகள் தாமதப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளதுடன் குறித்த விசாரணைகளுக்கு சுவிசர்லாந்து அரசாங்கமும் உதவியளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

எனினும் கடத்தி பின்னர் விடுவிக்கப்பட்ட பெண் பணியாளர் இன்னமும் விசாரணை செய்யப்படுவதற்கான மனநிலைக்கு திரும்பவில்லை என்று சுவிசர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது குறிபபிடத்தக்கது.