ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்!!

gotabaya11
gotabaya11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் வாழைச்சேனையை சேர்ந்த ஒரு முஸ்லிம் நபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த செய்தி ஒன்றினை தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது றிப்கான்,கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் மதன்,விசுவமடு தர்மபுரத்தைச் சேர்ந்த வேலு கோணேஸ்வரம்,விசுவமடு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்னம் நகுலேஸ்வரன், மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஆரியராஜன் கமலராஜா என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஐவரும் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.