டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பம் – அநுர ஜயசேகர

dengu 1
dengu 1

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக பொது இடங்களை இலக்கு வைத்து வொல்பெக்கியா பற்றீரியா அடங்கிய நுளம்புகளை சுற்றுச்சுழலுக்கு விடுவிப்பதற்கான வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் அந்த வேலைத்திட்டம் கடந்த காலங்களில் செயலிழந்திருந்ததாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த முதலாம் திகதி முதல் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வொல்பெக்கியா பற்றீரியா அடங்கிய ஈட்ஸ் ஈஜப்டை நுளம்புகள் சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்