வீதி விபத்தில் 07 நாட்களில் 45 பேர் பலி

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

கடந்த ஒரு வாரகாலப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஒரு வாரத்தில் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப் பகுதியில் 403 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 266 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, நாளாந்தம் 6 முதல் 7 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பதாகவும், 38 பேர் காயமடைவதாகவும் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

கம்பஹா, கண்டி மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகப்படியான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.