கொரோனா தொற்றால் உயிரிழந்த முதல் காவல்துறை அதிகாரி

big 165616 Coronavirus 1 4
big 165616 Coronavirus 1 4

மொனராகலை தலைமையக காவல்துறை நிலையத்தில் பணி புரிந்து வந்த நிலையில் ஓய்வு விடுமுறை பெற்றிருந்த 59 வயதுடைய உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி இருதய நோய் நிலைமை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை காவல்துறை திணைக்களத்தில் பதிவான முதலாவது கொரோனா மரணமாக குறித்த மரணம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி சாந்த ஜோகிம் தோட்டத்தில் 16 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.