ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Coronavirus Update 2 1
Coronavirus Update 2 1

மொனராகலை விஹாரமுல்ல பிரதேசத்தில் தானம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொனராகலை பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 5 பேர் கொழும்பில் இருந்து வந்து தான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட 12 தேரர்கள் விகாரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.