பொலிகண்டி வரையான தொடர் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு!

IMG 20210207 111134 1024x576 1
IMG 20210207 111134 1024x576 1

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபவணி போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

குறித்த பேரணியில் பங்குபற்றிய சிலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மூன்று காவல்நிலையங்களினால் ‘பி’ அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஏலவே பேரணிக்கு தடைகோரி பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ‘பி’ அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்து வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதோடு அதனை எதிர்வரும் மார்ச் மாதம் 29, மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளுக்கு நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.