ஜனாதிபதியை கொலை செய்ய சதி- ஓட்டமாவடி நபர் விளக்கமறியலில்

judgment
judgment

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணைக்கு மினுவாங்கொடை நீதிமன்ற நீதிவான் அனுமதியளித்துள்ளது.

சந்தேகநபர் மினுவாங்கொடை நீதிமன்றில் கட்டுநாயக்க பொலிஸாரால் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபரையே தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். சந்தேகநபரை மூன்று தினங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதியளித்தது.

ஏனையவர்கள் குற்றம் ஒன்றை இழைக்க தயாரில்லை என்ற விடயம் உறுதியானதை அடுத்து, அவர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.

விசாரணை நிறைவடைந்தவுடன் சந்தேகநபரை வரும் சனிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.