நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 73,000ஐக் கடந்துள்ளது!

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 73,000ஐக் கடந்துள்ளது.

நேற்றைய தினம் 942 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 73,116 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 939 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 69,094 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 3 பேரும் நேற்று கொவிட் நோயாளராக கண்டறியப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 6,526 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 567 பேர் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66,211 ஆக அதிகரித்துள்ளது.