புதியவகை கொரோனா குறித்து ஆய்வினை ஆரம்பித்த சுகாதார அமைச்சு

health ministry
health ministry

இலங்கையில் கண்டறியப்பட்ட பிரித்தானியாவில் பரவிவரும் புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வினை ஆரம்பித்துள்ளதாக உயர் சுகாதார அதிகாரி ஒருவர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய மாறுபாட்டின் பரவல் வீதம் அதிகமாக காணப்படுவதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்போது குறித்த தொற்று, கொழும்பு, அவிசாவளை, இங்கிரிய, பியகம, வத்தளை, மத்துகம, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.