மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

S1720022
S1720022

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்று இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற் குறிப்பிட்ட நிகழ்வில் 40 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். தாயக மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் இணைப்பாளர் தபேந்திரன் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தை சேர்ந்த சிவகுமார் மற்றும் தமிழ்க்குரல் வானொலியின் மூத்த அறிவிப்பாளர் கொற்றவை றொபேட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.