சீரற்ற காலநிலையால் 30,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

weather 0
weather 0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக கடந்த நான்னு நாட்களில் மாத்திரம் 9,175 குடும்பங்களைச் சேர்ந்த 30,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அனுராதபுரதம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல் மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களே இவ்வாறு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.