ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

1583741396 arrest women 2
1583741396 arrest women 2

ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் வத்தளை பகுதியில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 150 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

காவற்துறை அதிகாரிகளால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.