கிளி-உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே பரஸ்பர மோதல் :ஒருவர் பலி மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில்!

IMG 20210214 114754
IMG 20210214 114754

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி காவற்துறை பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், மேலும் மூவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன் மேலும் சிலரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர் முன்னெடுத்த வருகின்றனர்.