இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய கிளை திறந்து வைப்பு

IMG 20210215 WA0058
IMG 20210215 WA0058

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தனியார் முகவர் நிலையத்தின் வடக்கு மாகாண கிளை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தினை  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளார்.

இன்றைய திறப்பு விழாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் , அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி மற்றும் நாடாளுமன் உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதி உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.