நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

Parliament
Parliament

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (16) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இராணுவ வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுவுள்ளன.

இதேவேளை, மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படக்கூடியவர்கள், அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பழகும் நபர்களை குறிவைத்து 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.