யாழ்.மாநகர முதல்வரை சுவிஸ் தூதுவர் சந்திப்பு!

IMG 6479
IMG 6479

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தூதுவர் பல தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்துவரும் நிலையில் இன்றையதினம் நூலகத்திற்கு சென்று பார்வையிட்டதோடு மாநகர முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.