மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் சுவிஸில் மரணம்

death 1
death 1

மட்டக்களப்பு பெரிய கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த சுலக்சன் எனும் இளைஞன் சுவிஸ் நாட்டில் மரணமடைந்துள்ளார்.

ஆற்றங்கரையில் குறித்த இளைஞர் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் சுவிசர்லாந்து பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை போன்ற மரண சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளமையினால் இவை தொடர்பில் ஆராய்ந்து இனிவரும் காலங்களில் இழப்புக்களை தடுக்க வேண்டும் என்று புலம்பெயர்ந்து வாழும் சமூக நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.