நாளை இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர்!

Imran Khan std
Imran Khan std

நாளை இலங்கை வரவுள்ள பாகிஸ்தானின் பிரதமருடன், அந்தநாட்டின் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றும் விஜயம் செய்கிறது.

இரண்டு நாட்களுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கை வருகிறார்.

அவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.

அவருடன், பாகிஸ்தானின் அமைச்சரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர், இலங்கையில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக வருகின்றனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு அபிவிருத்தி, வர்த்தகம், முதலீடுகள், சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், பாதுகாப்பு மற்றும் கலாசார சுற்றுலா உள்ளிட்டவிடயங்களை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் இம்ரான் கான் இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்தாக்கப்படவுள்ளது.