அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு

laxman jappa abewardana
laxman jappa abewardana

கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில், அரசியல் பழிவாங்கும் நோக்குடன் அதிகாரிகளை விசாரணை செய்த குழுக்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனைகளை சிபாரிசு செய்யும் அதிகாரத்தை கொண்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொண்டால் தாம் தண்டனைக்கு உள்ளாகலாமென்ற அச்சத்துடன் செயல்பட்டதாகவும் அவ்வாறான நிலைமைகளை புதிய சட்டம் தடுத்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

சாதாரண விசாரணை ஆணைக்குழுவை விட அதிகளவு அதிகாரங்களைக் கொண்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை, விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.