மைத்திரியினால் வீணடிக்கப்பட்ட மக்கள் பணம்!!!

sirisena
sirisena

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நல்லாட்சிக்கான பல செயற்றிட்டங்களை மேற்கொண்டிருந்தாலும் மக்களின் வரிப்பணத்தினை தேவையற்ற விதத்தில் வீணடித்துள்ளமை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை கோடி கணக்கில் மக்கள் பணத்தை வீணடித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்ரிபால சிறிசேன 2017ம் ஆண்டு தேசிய பொருளாதார சபையை பேராசிரியர் லலித் சமரகோன் தலைமையில் நிறுவியிருந்தார். பின்னர் அதன் செயற்பாடுகள் திருப்தியின்மை காரணமாக கலைக்கப்பட்டது.

தேசிய பொருளாதார சபையின் பிரதான அலுவலகமாக உலக வர்த்தக மையத்தின் இரண்டு தளங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது, அத்துடன் இந்த நிறுவனத்திற்காக அரசின் உத்தியோகபூர்வ இல்லங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதன் அலுவலகத்திற்கான வாடகை 3 வருடங்களாக செலுத்தப்படாமலும், அதற்கென வழங்கப்பட்ட உபகரணங்கள் 3 வருடங்களாக பயன்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று ஆண்டுகளில் தேசிய பொருளாதார சபை எந்தவொரு பயனுள்ள நோக்கத்திற்கும் சேவை செய்யவில்லை எனவும் கோடிக்கணக்கான மக்களின் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தனது குடும்ப அங்கத்தவர்களை முக்கியமான அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமித்து பெரும் ஊதியத்தை வழங்கிவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது சகோதரன் குமாரசிங்க சிறிசேனவை ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவனத்தின் தலைவராக நியமித்து மாதம் 20 இலட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.