விசாரணை அறிக்கை மீது சபையில் 3 நாள் விவாதம் – சஜித் அணி வலியுறுத்து

download 34
download 34

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் அவசியம் எனப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியது.

மேற்படி அறிக்கை நேற்றுமுன்தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே எதிரணி பிரதம கொடறாவான லக்‌ஸ்மன் கிரியெல்ல எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

அத்துடன், தாக்குதலை தடுக்காமல் இழைக்கப்பட்ட தவறுகள் தொடர்பில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் தாக்குதலின் பின்புலம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவாதம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கலாம் எனச் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேவேளை, விவாதத்துக்கு வாய்ப்பு வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை ஆளுந்தரப்பு நிச்சயம் வழங்கும் என்று சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.