புதுக்குடியிருப்பில் தேவையுடைய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

apeal farm 15
apeal farm 15

அமரர் திரு ஆபேல் லூக்கஸ் அவர்களுடைய 1 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய உறவுகளால் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கோடு விவசாய பண்ணை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கோடும் இதன் வருமானமூடாக பாதிக்கப்படட சமூகத்தின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட விடயங்களுக்கு உதவும் முகமாகவும் அமரர் திரு ஆபேல் லூக்கஸ் அவர்களுடைய 1 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புலப்பெயர் தேசத்தில் வாழும் அவரது உறவுகள் பிள்ளைகளால் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது

அமரர் திரு ஆபேல் லூக்கஸ் அவர்களுடைய 1 ம் ஆண்டு நினைவு நாளான நேற்று (26) புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் குறித்த பண்ணை திறந்து வைக்கப்பட்டதோடு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 20 தேவையுடைய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வும் மேலும் பல மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய முதல்வர் றொபின்சன் ஜோசெப் அடிகளார் ,புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜனமேஜெயந்த் ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் ஒளித்திலகன் ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக முன்னாள் நிர்வாக கிராம அலுவலர் சிவதாஸ் ,மல்லிகைத்தீவு கிராம அலுவலர் சமுர்த்தி அலுவலர் ,கிராம மடட அமைப்புக்களில் பிரதிநிதிகள் அமரர் திரு ஆபேல் லூக்கஸ் அவர்களுடைய உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்