கள்ளப்பாடு அ.த.க பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் மதிப்பளிப்பு

IMG 1440
IMG 1440

முல்லைத்தீவு – கள்ளப்பாடு அ.த.க பாடசாலையில் கடந்த 2020ஆம் ஆண்டு, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்யைில் தோற்றி சித்தியடைந்ந மாணவர்கள் நேற்று(26) மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் முதல்வர் நடராசா கருணாகரனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் மற்றும், விருந்தினர்களது வரவேற்புடன் ஆரம்பித்தது.

தொடர்ந்து இந் நிகழ்வில் மங்கல விளக்கேற்றல், மாணவர்களது கலை நிகழ்வுகள், விருந்தினர்களது உரை என்பன இடம்பெற்றதையடுத்து, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களும், நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அதேவேளை பாடசாலையின் முதல்வர், மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு இப் பாடசாலையில் மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், 16மாணவர்கள் நூறு புள்ளிக்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இலங்கைவங்கி மற்றும் கொமர்சல் வங்கிகளின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் நலன்விரும்பி வேலுப்பிள்ளை பரமேந்திரம் ஆகியோர் கலந்துகொண்டதுடன், மேலும் இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களது பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.