சிறிலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தியவர் மகிந்தவே – லக்ஷமன் பியதாஸ

201911201836332476 Sri Lankas New President Names Brother Mahinda Rajapaksa As SECVPF 1
201911201836332476 Sri Lankas New President Names Brother Mahinda Rajapaksa As SECVPF 1

சிறிலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியவர் மகிந்தவே என அக்கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக அதன் செயற்பாடுகளை முடக்க சூழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்முடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை மீறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், தேசிய பட்டியல் மற்றும் இதர பதவிகள் விடயத்தில் வாக்குறுதிகளில் நிறைவேற்றாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ எமது கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி புதிய கட்சி தொடங்கினார். தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை மீறி கட்சியை மீண்டும் சரிவுக்கு இட்டுச் செல்லவும் கட்சியின் தலைவர் மீது நீதிமன்ற வழக்கு சுமத்தி மேலும் கட்சியின் செயற்பாட்டை மழுங்கடிப்பு செய்யவும் முயற்சிகள் இடம்பெறுவதாக ரோஹன லக்ஷமன் குறிப்பிட்டார்.

இந்த முயற்சியை தோற்கடிக்க அனைத்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் ஒன்றுதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.