ஐக்கிய தேசிய கட்சியை உடைத்தது ரவூப் ஹக்கீம்தான்-ருவன் விஜேவர்தன

download 8
download 8

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கும் சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து வெளியேறியதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் எனவும் இந்த விடயத்துக்கு அவரே பொறுப்பு கூற வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரவூப் ஹக்கீம் ஒவ்வொரு விடயத்தையும் கூறி சஜித் பிரேமதாஸவை பிளவுபடுத்தியதுடன், பின்னரான காலத்தில் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கட்சி பிளவுபடுவதற்கு டயானா கமகேவும் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.