சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் இனவாதம் உள்ளதாக மரிக்கார் கருத்து

download 4
download 4

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் , அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை காலம் தாழ்த்தி மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிப்படுகிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.

ஜெனிவா நெருக்கடியிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது – எதிர்க்கட்சி

கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரும் இரு மாதங்களாக கட்டாய தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

எனவே இந்த தீர்மானம் மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடல விவகாரத்தில் பல வேறுபட்ட கருத்து முரண்பாடுகளின் பின்னர் சுகாதார அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னர் தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொவிட் சடலங்கள் தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு இரு மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

அந்த அறிக்கையில் இந்த விடயமும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனில் இரண்டு மாதங்களாக பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

தெமட்டகொட – குப்பியாவத்தை மயானம் இதற்கு தகுந்த இடமாகும் என்று பேராதனை பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.

குறித்த மயானம் மருதானை பள்ளிக்கு சொந்தமானதாகும். இங்கு கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மருதானை பள்ளி விருப்பம் தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறிருக்கையில் இந்த தீர்மானத்தை மேலும் காலம் தாழ்த்துவதன் மூலம் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கிறீர்களா?

டிசம்பர் 28 ஆம் திகதி நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரும் இரு மாதங்களாக கட்டாய தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே இந்த தீர்மானம் மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.